ஆக்கம்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை ~

dushi.pillai@gmail.com ~

தமிழ் வடிவம்: க. தி. குமாரன்


மா
ர்ட்டின்
லூதர் கிங் ஜூனியர் ஞாபகார்த்த கண்காட்சி, பெப்ரவரி 6ஆம் திததி கொழும்பு, தேசிய கலா பவனத்தில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் மூத்த புதல்வரும், குடியுரிமை செயற்பாட்டாளருமாகிய மூன்றாம் மார்ட்டின் லூதர் கிங்கினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

அன்பு

ட்டை போடப் போடத்தான்
பள பளக்கும் வைரமே

மெருகு கொடுக்கக் கொடுக்கத்தான்
மினு மினுக்கும் தங்கமே

அரும்பு மலர மலரத்தான்
அளிக்கும் மணத்தை மலருமே

அன்பு பெருகப் பெருகத்தான்
அமைதி அடையும் உலகமே -குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா (1922-1989)

1

1
பிரதம விருந்தினர் மார்ட்டின் லூதர் கிங் III, ஸ்ரீ லங்கா, மாலைதீவுகளுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீஷியா புட்டெனிஸ் அவர்களினால் வரவேற்கப்படுகிறார்.

3

3
இவ் ஞாபாகார்த்த நிகழ்வு புகைப் பட கண்காட்சி, திரைப் பதிவுகள், கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகள் என பல தரப்பட்ட நிகழ்வுகளுடன் இடம்பெறுகிறது.

வீழமாட்டோம்...நாம் வீழமாட்டோம்

மே மாதம் 1963 இல், பேர்மின்ஹாம், அலபாமா- சென் சென் லூக்ஸ் பப்டிஸ்ட் தேவாலயத்தில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆற்றிய உரை.

4

4
இக் கண்காட்சி கொழும்பில் பெப்ரவரி 9ஆம் திகதி வரை இடம்பெறுகிறது. பின்னர் பெப்ரவரி 17 முதல் 19 வரை அம்பாறை, பெப்ரவரி 22 முதல் 24 வரை மட்ட்க்களப்பு மற்றும் மார்ச் 7 முதல் 9 வரை யாழ்ப்பாணம் என நாடளாவிய ரீதியில் அமெரிகத் தூதரகத்தின் அனுசரணையுடன் இடம் பெறுகிறது.

5

5
ரோசா பார்க்ஸ், நவீன குடியுரிமை இயக்கத்தின் அன்னையாக நோக்கப்படுகிறார்.
ரோசா பார்க்ஸ், தனது 42 ஆவது வயதில் டிசம்பர் 1, 1955 ஆம் அண்டு அலபாமா மாநிலத்தில் பேருந்துகளில் வெள்ளயினதவருக்கு இருக்கை முதலுரிமை வழங்கப்படுவதை எதிர்த்து தனது ஆசனத்தை வழங்க மறுத்தார்.
2005 அக்டோபரில் ரோசா பார்க்ஸ் மறைந்த போது என்.பி.ஆர். வானொலியில் ரோசா பார்க்கின் முன்னைய செவ்வியையும் உள்ளடக்கி ஒலிபரப்பான நிகழ்ச்சி

6

6
மார்ட்டின் லூதர் கிங் III, அமெரிக்கத் தூதுவர் பற்றீஷியா புட்டெனிஸ் சகிதம் கண்காட்சியினை பார்வையிடுகிறார்.

7

7
மார்ட்டின் லூதர் கிங் III கண்காட்சி பார்வையின் போது அமெரிக்கத் தூதுவர் பற்றீஷியா புட்டெனிஸுடன் உரையாடுகின்றார்.

8

8
கொழும்பு, சின்மயா மிஷன் ஆசார்யா பிர. தர்ஷன் சைதன்யா கணகாட்சியினை பார்வையிடுகின்றார்

9

9
கண்காட்சி பெருந்தொகையான பொது மக்கள் கவனத்தினை ஈர்த்துள்ளது.

10

10
ஆரம்ப நிகழ்வில் பெல்லன்வில ஆலய பிரதம அமர்வாளர் வண. பேராசிரியர் பெல்லன்வில விமலரத்தின, சின்மயா மிஷன் ஆசார்யா பிர. தர்ஷன் சைதன்யா, சுபோதி ஒருங்கிணை கல்வி நிலய நிறுவனரும் பணிப்பாளருமாகிய அருட் தந்தை மேர்வின் பெர்னான்டோ மற்றும் ஹசிஸ் அப்துல் ரஹ்மான் ஆசிகள் வழங்கினர்.

11

11
"ஆத்ம இராகம் ஒன்றில் தான் வாழும் உயிர்கள் என்றுமே"

12

12
சுதந்திர பண்கலவை - ஆத்ம இராகம் வழங்கும் குழுவினர்

13

13
நெஞ்சை நெகிழ்க்கும் ஆத்ம இராகம்

14

14
ஆத்ம இராகம் இசைத்தவருக்கு உள்ளத்திலிருந்து ஆரவாரிப்பு

15

15
மார்ட்டின் லூதர் கிங் பல்வேறு சமய தத்துவங்களையும் பாரம்பரியங்களையும் உள்வாங்கி இயங்கியது மட்டுமின்றி, பல வேற்று மத பின் புலங்களை கொண்டிருந்தோருடன் பூண்டிருந்த நட்புறவிலும் வசப்பட்டுப் புரிந்துணர்வுடன் பங்காற்றினார்.

16

16
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் வாழ்க்கை துணைவியார் கொரேட்டா ஸ்கொட்ட் கிங், மறைந்த பிரதமர் இந்திரா காந்தியுடன்; மார்ட்டின் லூதர் கிங் மறைவின் மூன்று வருடங்களுக்குப் பிற்பாடு நவம்பர் 5ஆம் திகதி 1971 இல் இச் சந்திப்பு வாஷிங்டன் டி.சியில் இடம் பெற்றது.

17

17
கலந்து கொண்ட சபையோர்

18

18
நிகழ்வின் பூரண உணர்வில் சபையோர்

19

19
பெயருடன் வரக் கூடிய பழுக்கள், எதிர்பார்ப்புக்கள் என்பவற்றினால் தனது மகனுக்கு தந்தையின் பெயரினை சூட்ட திருமதி. கொரேட்டா கிங் விரும்பவில்லை. இருப்பினும் தகப்பனார் மார்ட்டின் லூதர் கிங் III என்று பெயரிடவே விரும்பினார்.

20

20
வியட்னாம் நாட்டு பௌத்த மத குரு வண. திச் நாட் ஹன்ஹ் அவர்களினை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதிய வண. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், "அவர் தெய்வீகமானவர். அவரின் சமாதான வழி சிந்தனைகள் அமுல் படுத்தப்படின், மதங்களுக்கிடையே இணக்கத்திற்கும் இவ் உலகத்தின் சகோதரத்துவத்திற்கும், மனித நேயத்துக்கும் அது வழி கோலும்" என்றார்.

21

21
தனது கருத்துக்களை பதிவு செய்யும் மாட்டின் லூதர் கிங் III

22

22
ஸ்ரீ லங்கா, மாலைதீவுகளுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீஷியா புட்டெனிஸ் வரவேற்புரை நிகழ்த்துகின்றார்.

23

23
மார்ட்டின் லூதர் கிங் III தேசிய கலா பவனத்தில் கூடிய சபையோர் மத்தியில் உரையாற்றுகின்றார்.

24

24
ஸ்ரீ லங்கா, மாலைதீவுகளுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீஷியா புட்டெனிஸ், சுபோதி ஒருங்கிணை கல்வி நிலய நிறுவனரும் பணிப்பாளருமாகிய அருட் தந்தை மேர்வின் பெர்னான்டோவுடன் உரையாடுகின்றார்.

25

25
வெள்ளை நிறத்தவர் நெஞ்சங்களை சாத்வீக போராட்டம் வென்றுள்ளதா என்ற கேள்விக்கு, "ஓர் இரவில் விளையும் அதியமல்ல அது" என்று பதிலளித்தார்.

26

26
பெல்லன்வில ஆலய பிரதம அமர்வாளர் வண. பேராசிரியர் பெல்லன்வில விமலரத்தின, முஸ்லிம் பெண்கள் விவகார ஆராய்ச்சி பணி மன்றத்தின் இணை நிறுவனர், தேசாபிமானி திருமதி ஜெசீமா இஸ்மெயிலுடன் கண்காட்சியினை பார்வையிடுகின்றார்.

27

27
வாஷிங்டன் டி.சியினை நோக்கிய நடை பவனி - ஆகஸ்ட் 28, 1963 ஆம் திகதி

28

28
மாட்டின் லூதர் கிங் ஜூனியர், இந்தியாவில் மகாத்மா காந்தியின் வழி நடப்போருடன் ஒரு திங்கள் தங்கியிருந்து, காந்தியின் தத்துவங்கள் மற்றும் அமைதி வழி போராட்டம் என்பன பற்றி அறிந்து கொள்வதில் ஈடுபட்டார்.

29

29
வாஷிங்டன் டி. சி. நடைப் பேரணி தொடர்கிறது......

30

30
ஸ்ரீ லங்கா, மாலைதீவுகளுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீஷியா புட்டெனிஸ், பெல்லன்வில ஆலய பிரதம அமர்வாளர் வண. பேராசிரியர் பெல்லன்வில விமலரத்தினவுடன் உரையாடுகின்றார்.

31

31
வண. மாட்டின் லூதர் கிங் ஜூனியர், அகஸ்ட் 23, 1963 இல் "எனது இன்றைய கனவு" என்று தொடங்கி நிகழ்திய உரை உலகெங்கினும் பரந்து வாழும் ஒரு கோடியினரின் கவனத்தினை பெற்றது.
ஜனவரி 19, 2009 தினத்தன்று வண. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்களின் 80ஆவது அகவை பூர்த்தியின் அடுத்த தினம், ஜனவரி 20 ஆம் திகதி, அமெரிக்காவின் 44ஆவது ஜனாதிபதியாக பராக் ஒபாமா பதவியேற்றார். இதனை குறிக்குமுகமாக என்.பி.ஆர். வானொலி, வண. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்களின் "எனது இன்றைய கனவு" உரையினை ஒலிபரப்பியது.

32

32
"அவர் அமைதி வழியிலான ஒரு மனிதர்...ஓர் வன் முறையாளரின் கைகளினால் பறித்தெறியப்பட்டவர்; அன்பின் உறைவிடமானவர், வக்கிரமானவரின் வன்செயலில் வீழ்ந்தார். இதனையே சரித்திரமும் காட்டி நிற்கிறது. ஆபிரகாம் லிங்கன் பிளவுபட்டிருந்த ஓர் தேசத்தின் காயங்களை ஆற்ற விளைந்திருந்த வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டதும், எழுந்தது அமைச்சர் ஸ்டன்டன் குரல்...அவர் தொன்று தொட்டவர் என்றார் அவர். இந்த சம்பவங்கள் மகாத்மா காந்தியிலும் உண்மையானது..அவர் தொன்று தொட்டவர்"

33

33
சுதந்திர பண்கலவை - ஆத்ம இராகம் வழங்கிய குழுவினர் பிரதம விருந்தினர் மார்ட்டின் லூதர் கிங் III உடன் படம் பிடித்த்துக் கொள்கின்றனர்.

34

34
தேசிய நுண் கலை மன்றத்தில் கூடியோர் மார்ட்டின் லூதர் கிங் III இடம் நினவு கையொப்பம் பெறுகின்றனர்.
No posts.
No posts.